6 சிக்சர்கள் அடித்த தினம் - தன் குழந்தையுடன் பார்த்து மகிழ்ந்த யுவராஜ் சிங் - வைரலாகும் வீடியோ

Viral Video Yuvraj Singh
By Nandhini Sep 20, 2022 10:01 AM GMT
Report

தன் குழந்தையுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தன்னுடைய 6 சிக்சர்கள் அடிக்கும் வீடியோவை பார்த்து மகிழ்ந்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத அற்புத தருணங்களில் ஒன்று என்று என்றால், அது 2007ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் விளாசிய அந்த ஆறு சிக்ஸர்கள்.

முதல் டி20 உலகக் கோப்பையில் இந்த சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூகவலைத்தளங்களில் எப்பவும் ஆக்டிவாக இருக்கும் யுவராஜ் சிங் அவ்வப்போது போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில், தந்தையர் தினமான தன் குழந்தையின் பெயரை யுவராஜ் சிங் வெளிப்படுத்தினார். 'ஒரியன் கீச் சிங்' என்ற பெயர் சூட்டியிருப்பதாக கூறியுள்ள யுவராஜ் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

வைரலாகும் வீடியோ

நேற்று யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் அடித்த தினத்தையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் தன் குழந்தையுடன் அந்த 6 சிக்சர்களைப் பார்க்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இவரை விட்டால் இதைப் பார்க்க வேறு பார்ட்னர் எவரும் உண்டோ” என்று பதிவிட்டுளளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

yuvraj-singh-viral-video