Saturday, May 17, 2025

'' ரோஹித் வேண்டாம் , இந்த பையனை கேப்டனாக்குங்கள் '' - அட்வைஸ் கொடுத்த யுவராஜ் சிங்

yuvrajsingh rishabhpant testcaptain
By Irumporai 3 years ago
Report

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடத்திற்கும் மேலாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார்.

இந்த நிலையில் விராட் கோலி, திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி நாள் வரை ஆக்ரோஷமாகவும், உற்சாகமாகவும் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி வெறும் 24 மணி நேரத்தில் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 விராட் கோலியின் இந்த முடிவு குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங், அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தான தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ரிஷப் பண்ட் தான் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும், விக்கெட் கீப்பரால் மற்றவர்களை விட போட்டியை நன்கு உள்வாங்கி கொள்ள முடியும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்தை மேற்கோள்காட்டி யுவராஜ் சிங்கும், சுனில் கவாஸ்கரின் கருத்து சரியானது தான் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.