என்னோட Biopic படம் இது - உறுதி செய்த யுவராஜ் சிங்!! படத்தின் ஹீரோ இவரா? ரசிகர்களை குஷி

Indian Cricket Team Yuvraj Singh
By Karthick Jun 19, 2024 11:29 AM GMT
Report

இந்தியா கிரிக்கெட்டின் முக்கிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங்

ஒரே ஓவரில் 6 சிக்ஸ், 2011-ஆம் ஆண்டின் உலகக்கோப்பையின் தொடர் நாயகன், கேன்சரை வென்று இந்திய அணியில் விளையாடியவர் என பல சிறப்புகளை பெற்றுள்ளவர் யுவராஜ் சிங். தற்போது ஐபிஎல் ரசிகர்களையும் அவர் தனது அபாரமான விளையாட்டின் மூலமாக தனது ராசிகர்களாக்கி கொண்டுள்ளார் யுவராஜ் சிங்.

yuvraj singh

வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட யுவராஜ் சிங், கதையை அடிப்படையாக கொண்டு பயோபிக் எடுக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்து வந்தன. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. பல அறிவிப்புகள் மட்டுமே வந்தது.

Biopic

அப்படி இருக்கும் சூழலில் தான், தற்போது படம் ஒன்று தயாராகுவதும், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யுவராஜ் சிங்'கின் தந்தை யோக்ராஜ் சிங் வெளியிட்டுள்ளார்.

yuvraj singh world cup celebration

The Man of the Longest Hour என்ற பெயரில் யோக்ராஜ் சிங் படம் ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இந்தப் படம் யோகராஜ் மற்றும் யுவராஜ் சிங் இடையேயான தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த தந்தை-மகன் உறவை மையமாகக் கொண்டது. யோகராஜ் சிங் தனது மகன் யுவராஜ் ஏற்கனவே படத்திற்கு அதன் தலைப்பை வைத்துள்ளதாகவும், இறுதி வரைவுக்கு அவர் ஒப்புதல் அளிப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இது அவர்களின் பிணைப்பு மற்றும் யுவராஜின் பயணத்தின் உண்மையான சித்தரிப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். யுவராஜ் சிங்கும் தனது வாழ்க்கை வரலாற்றில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் அந்த பாத்திரத்திற்காக ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்துள்ளார். ரன்பீர் கபூர் அவரை திரையில் சித்தரிக்க சிறந்த தேர்வாக இருப்பார் என்று அவர் நம்புகிறார் என்றும் கூறியுள்ளார்.