டெல்லி போட்டியில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்...!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு என்ன காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
15வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடர் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை சென்ற அந்த அணி இம்முறை பிளே ஆஃப் கூட செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் கொல்கத்தா அணியின் தொடர் தோல்வி குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் கொல்கத்தா அணியில் இருந்து பாட் கம்மின்ஸ் புறக்கணிக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்றும், 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் அணியில் சேர்க்காதது வெற்றியை பாதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.