என்னை ஏமாத்திட்டாங்க..இந்திய அணியின் கேப்டன் ஆகமுடியாததற்கு இது தான் காரணம் - யுவராஜ் சிங்..!

Cricket
By Thahir May 10, 2022 12:01 AM GMT
Report

இந்திய அணியின் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும் ஆனால் அது நடக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

என்னை ஏமாத்திட்டாங்க..இந்திய அணியின் கேப்டன் ஆகமுடியாததற்கு இது தான் காரணம் - யுவராஜ் சிங்..! | Yuvraj Singh Captain Position Open Talk

அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் இருந்த போது யுவராஜ் சிங் துணை கேப்டனாக அங்கம் வகித்தார்.

ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்த நிலையில் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் கேப்டன் பதவி வழங்கப்படாதது குறிதது செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார் யுவராஜ் சிங்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,“இந்திய அணியின் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் அப்பொழுது நடைபெற்ற கிரேக் செப்பல் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் எனக்கு கிடைக்கவேண்டிய கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைக்க விடாமல் செய்துவிட்டது,

அப்பொழுது நான் எனது அணிக்கு தான் ஆதரவாக இருந்தேன் மற்றும் அணி வீரர்களுக்கு அதரவா இருந்தேன், ஆனால் அது பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை இதன் காரணமாகவே எனக்கு கேப்டன் பதவி மறுக்கப்பட்டது,

ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து எனக்கு தெரியவில்லை, அப்பொழுது உடனே நான் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன்,

விரேந்தர் சேவாக் அணியில் இடம்பெறவில்லை மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஆனால் தனக்கு கொடுத்த பொறுப்பை தோனி மிகச் சிறப்பாகவே செய்தார்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.