முன்னாள் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் அதிரடி கைது - ரசிகர்கள் அதிர்ச்சி

1 month ago

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ரோஹித் சர்மாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் உரையாடும் போது சாஹலுக்கு எதிராக சாதிய வன்ம வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக  ஒரு வருடத்திற்கு முன்பு அவர் மீது ஜான்சியில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட யுவராஜ் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். யுவராஜ் சிங் மீது, 153A பிரிவின் கீழ் (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையிலும், பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும்153B பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுஉலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்