தோனிக்கு முன் நான் கேப்டன் ஆவேன் என நினைத்தேன் - மனம்திறந்த முன்னாள் இந்திய வீரர்

இந்திய அணிக்கு பல தலைசிறந்த வீரர்கள் கேப்டனாக இருந்துள்ளனர். ஆனால் பல வீரர்கள் தகுதியிருந்தும் வாய்ப்பு கிடைக்காததால் கேப்டனாக முடியாமல் ஓய்வு பெற்றுள்ளனர்.

அப்படி ஒரு வீரர் தான் யுவராஜ் சிங். கிரிக்கெட் உலகில் தோனி - யுவராஜ் சிங் நட்பு பிரபலமானது. அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்துள்ளனர். ஆனால் சில சலசலப்புகளும் இல்லாமல் இல்லை.

இந்த நிலையில் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் யுவராஜ் சிங் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் தனக்கு கேப்டன்ஷிப் கிடைக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக யுவராஜ் கூறியுள்ளார்.

மேலும் அவர், "இந்தியா 2007ல் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பையை இழந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் கொந்தளிப்புடன் இருந்தது. இதனால் அதற்குப் பிறகு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் தான், டி20 உலகக் கோப்பையில் நான் இந்திய அணியின் கேப்டனாவேன் என்று எதிர்பார்த்தேன். பின்னர் எம்.எஸ். தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தோனி தலைமையில் ஆனால், ஒரு வீரனாக நீங்கள் அணிக்கு எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும்.

யார் கேப்டனாக இருந்தாலும் நீங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் வீரராக நீங்கள் இருக்க வேண்டும். அப்படி தான் 2007 உலகக் கோப்பையை இளம் அணியோடு சென்று விளையாடி வென்றுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்