யுவன் இசையில் மாநாடு முதல் பாடல் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்!

simbu manadu yuvan shankar
By Anupriyamkumaresan Jun 21, 2021 09:34 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் மெஹ்ரசைலா இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிம்பு – யுவன் கூட்டணிக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு ’மாநாடு’ படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

யுவன் இசையில் மாநாடு முதல் பாடல் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்! | Yuvan Simbu Manadu Song Released Viral

ஏற்கனவே, ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ உள்ளிட்ட சிம்பு-யவன் கூட்டணியின் ஹிட் பாடல்கள் வரிசையில் தற்போது `மாநாடு’ சேர்ந்துள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் மெஹ்ரசைலா பாடல் மட்டுமல்லாமல் நடிகர்களின் காஸ்டியூம், நடனம் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

யுவன் இசையில் மாநாடு முதல் பாடல் வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்! | Yuvan Simbu Manadu Song Released Viral

’ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா இன்பம் இங்கே பண்டலா’ என உற்சாகமூட்டும் யுவன் பாடலில், ’ஒத்த மனசில் ஒத்த காதல் ஒத்திக்கிட்டா போதும்ல’ என்ற வரிகள் ரிப்பீட் மோடில் கேட்க வைக்கின்றன.

யுவன் சகோதரி பவதாரணியும் கடைசியில் நான்கு வரிகள் பாடியுள்ளது இந்த பாட்டிற்கு இன்னும் அழகேற்றியுள்ளது.