தளபதிக்கு வலிமை கொடுத்த யுவன் , வைரலாகும் புகைப்படம்
தளபதி விஜய்யுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடித்த ’புதிய கீதை’ என்ற ஒரே ஒரு திரைப்படத்திற்கு மட்டும் யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார் என்பதும் அதன் பின்னர் இருவரும் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் பலர் தங்கள் வேண்டுகோளை சமூகவலைதளங்கள் மூலம் விடுத்து வரும் நிலையில் தற்போது திடீரென விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
— Raja yuvan (@thisisysr) December 24, 2021
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பதும் விரைவில் இருவரும் இணையும் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.