'கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்' - இணையத்தை தெறிக்க விடும் யுவனின் புகைப்படம்..!

viral-photo music-director yuvan-shankar-raja கருப்புதிராவிடன் தமிழன்டா
By Nandhini Apr 18, 2022 08:27 AM GMT
Report

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாரளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், இந்தி பேசாத மாநிலங்களும் இனி இந்தி பேச வேண்டும. ஆங்கிலத்துக்கு மாற்றான மொழியாக இந்தியை கொண்டு வரும் நேரம் வந்து விட்டது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை பேச வேண்டும் என்று கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில், மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்கள், மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், இந்தி திணிப்புக்கு எதிராக இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானும் உரத்த குரல் கொடுத்தார். தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழணங்கு என்ற தமிழ்த் தாய் படத்தை பகிர்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டுவிட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து பலர் இந்தி திணிப்புக்கு எதிரான தமிழகர்கள் முழக்கம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.