பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘கோல்டன் விசா’ வழங்கி கௌரவித்த துபாய் அரசு - குவியும் வாழ்த்து
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
கோல்டன் விசா
தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, மீனா, ஆண்ட்ரியா, நடிகர் நாசர், வெங்கட் பிரபு ஆகியோர் இந்த விசாவை பெற்றனர்.
கோல்டன் விசாவில் இருக்கும் ஸ்பெஷல்
இந்த ‘கோல்டன் விசா’ என்பது அந்நாட்டின் குடியுரிமை போன்றது. இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை இந்த விசா மூலம் நாம் துபாய்க்கு சென்று வரலாம்.
மேலும், இந்த விசாவை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. பல துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இந்த ‘கோல்டன் விசா’வை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் வாழ்த்து
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.
இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து யுவன் சங்கர் ராஜாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Namma Little Maestro @thisisysr has been granted Golden Visa ? by the Government of United Arab Emirates ♥️#YSRGetsGoldenVisa | #Yuvan | #YuvanShankarRaja pic.twitter.com/MY8PJFpBSh
— Ysrclub™ (@ysrhub) November 10, 2022