மீண்டும் வெளியான வலிமை பட அப்டேட் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வலிமை படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் - இயக்குனர் ஹெச்.வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 2வது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின், மோஷன் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் படத்தின் முதல் பாடலான “நாங்க வேற மாதிரி” பாடல் வெளியானது. அந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே பத்திரிகையாளர் கவிதா எழுதிய எண்ணம்போல் வாழ்கை என்ற பாடல் யுவன் சங்கர்ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் யூ டியூப் பக்கத்தில் வெளியாகிறது. அதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது "நாங்க வேற மாதிரி" பாடலை மூன்று நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் விரைவில் வலிமை படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என்றும் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதனால் அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகளால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.