சீனா வரை ஒலிக்கும் யுவனின் புதிய பாடல்... ஒலிம்பிக் சுவாரஸ்யம்...
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த "வென்று வா வீரர்களே" என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 110க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த போட்டி தொடர் பங்கேற்கின்றனர்.
#Olympics-இல் வெற்றிபெற்று தாய்நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க களம்காணும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள #VendruvaVeerargale பாடலை வெளியிட்டேன்.#Cheer4India pic.twitter.com/mgJpWf55HH
— M.K.Stalin (@mkstalin) July 26, 2021
இந்நிலையில், ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், "வென்று வா வீரர்களே" என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துப் பாடியுள்ளார்.
இந்த நிகழ்வின் போது விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.