யுவா சங்கம் - இளைஞர்களின் இடையே பரஸ்பர புரிதல் ஊக்குவிப்பு
'யுவா சங்கம்' என்னும் கல்விசார் நிகழ்வு, இளைஞர்களுக்காக, மத்திய அரசால் வடிவமைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு. பல்வேறு மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் இடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
யுவா சங்கம்
மொழி, கலாச்சாரம், மரபு, இசை, உணவு, உடை, பாரம்பரியம் ஆகியவற்றிலுள்ள பன்முகத்தன்மையை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுப்பதே இதன் திட்டம். குறிப்பாக, ஒரு மாநிலத்தின் முக்கியமான ஐந்து தூண்களான சுற்றுலா, வளர்ச்சி, பாரம்பரியம், பரஸ்பர உறவு, தொழில்நுட்பம் ஆகியவற்றை அவர்கள் மனதில் பதியச் செய்வதற்கே இந்த முயற்சி.
கடந்த சில வருடங்களில், யுவா சங்கத்தின் முதல் கட்டம், 25 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1200 இளைஞர்களின் பங்கேற்புடனும், இரண்டாம் கட்டம், நிறுவனங்களைச் சேர்ந்த 1000 இளைஞர்களின் பங்கேற்புடனும் முடிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, யுவா சங்கத்தின் மூன்றாம் கட்டம் தற்போது துவங்கியுள்ளது.
இளைஞர்களின் பங்கேற்பு
அதில் தமிழக மாணவர்களை ஒருங்கிணைத்து ராஜஸ்தானிற்கு அனுப்பவும் தமிழகத்திற்கு வரும் ராஜஸ்தான் மாணவர்களை வழிநடத்தி, தமிழகக் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கவும் இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ. எம்) திருச்சிராப்பள்ளி பொறுப்பேற்றுள்ளது. 20 இதன் தொடக்கவிழா, கடந்த 24.11.2023- வெள்ளிக்கிழமையன்று, வருவாய்த்துறையின் கூடுதல் ஆணையரான, திருமதி. நித்யா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்கள் மாணவர்கள் அவருடன் கலந்துரையாடி, தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாணவர்கள், தலைவாழை விருந்து உண்டு, பல்லாங்குழி, கில்லி, சிலம்பம், கபடி ஆகிய விளையாட்டுகளை விளையாடி, கிராமிய நடனங்களைக் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் 10 நாட்கள் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தங்கியிருந்து, தமிழகத்தின் வெவ்வேறு பண்பாட்டு மையங்களான, மதுரை கீழடி, திருச்சி மலைக்கோட்டை, தஞ்சாவூர் பெரியகோவில், ராமேஸ்வரம் தனுஷ்கோடி, சென்னை மாமல்லபுரம் ஆகியவற்றை, ஐ.ஐ.எம் அதிகாரிகளின் துணையோடு பார்வையிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.