டி20 கிரிக்கெட் போட்டில் யூசுப் பதானை அடிக்க பாய்ந்த ஜான்சன்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Cricket Viral Video
By Nandhini Oct 03, 2022 09:14 AM GMT
Report

டி20 கிரிக்கெட் போட்டில் யூசுப் பதானை ஜான்சன் அடிக்க பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

யூசுப் பதானை அடிக்க பாய்ந்த ஜான்சன்

ஜோத்பூரில் நேற்று லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அப்போது, ஆட்டத்தில் யூசுப் பதான் மற்றும் மிட்சேல் ஜான்சன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இருவரும் மோதிக்கொண்டனர்.

அப்போது ஜான்சன் யூசுப்பைத் தள்ளி விட்டார். இதையடுத்து இருவரையும் நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக்காகி வருகின்றனர். 

yusuf-pathan-johnson-viral-video