5 நிமிஷ லுக் தான்..மாத்தி மாத்தி 4 வாட்டி நடந்த கல்யாணம் ..யுகேந்திரனின் பரபர காதல் கதை!!

Tamil Cinema Bigg Boss Tamil Actors
By Karthick Oct 03, 2023 03:44 PM GMT
Report

நடிகரும், பாடகருமான யுகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஹேமா மாலினி காதல் கதை குறித்து இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

யுகேந்திரன்

2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் விஜய், அஜித் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகர் யுகேந்திரன். பிரபல பின்னணி பாடகரான மலேஷியா வாசுதேவனின் மகனான இவர் நடிப்பை தாண்டி பல பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.

yugendran-malaysia-vasudevan-love-story

திடீரென படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்ட யுகேந்திரன் மீடியா வெளிச்சத்தில் இருந்து பெரிதும் விலகி இருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு இவர் பெரிய அறிமுகத்தை பெற்றுள்ளார்.

காதல் கதை

இவர், கடந்த 1999-ஆம் ஆண்டு இவர் இலங்கையை சேர்ந்த சிங்கப்பூர் பெண்ணான ஹேமமாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் குறித்து யுகேந்திரன் மற்றும் ஹேமா மாலினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

அந்த பேட்டியில், யுகேந்திரன் தானே முதலில் காதலை சொன்னதாக கூறி, முதலில் திருமணம் செய்து கொள்ளலாமா என்று தான் கேட்டேன் வெளியே செல்லலாமா, சினிமாவிற்கு செல்லலாமா, டீ குடிக்க போகலாமா என்றெல்லாம் கேட்கவில்லை என்றார்.

yugendran-malaysia-vasudevan-love-storyy

உண்மையில், முதன்முறையாக இவரை சந்திக்கும் போது எனக்கு பிடிக்கவே இல்லை என்ற ஹேமா மாலினி, வீட்டுக்கு தெரியாமல் தான் நாங்கள் அப்போது திருமணம் செய்து கொண்டோம் என்றார். மலேசியாவில் நண்பர்கள் முன்னிலையில் வீட்டிற்கு தெரியாமல் ஒரு முறையும், பதிவு செய்ய ஒரு முறையும், இலங்கையில் ஒரு முறையும், உறவினர்கள் ஜாதகம் பார்த்து ஒரு முறை என ஒரே கல்யாணத்தை தாங்கள் 4 முறை செய்து கொண்டதாக யுகேந்திரன் அந்த பேட்டியில் கூறினார்.

வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டதால் யுகேந்திரனின் பெற்றோர் காரணமாக அப்போது 10 மாதங்கள் இருவரும் பிரிந்திருந்த நிலையில், தான் தற்போது 21 ஆண்டுகள் ஆகியும் நல்ல நெருக்கம் தங்களுக்கு இருந்து வருவதாக ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.