யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு!

Youtube Kanchipuram
By Thahir Oct 30, 2023 10:16 PM GMT
Report

டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய TTF

டிடிஎப் வாசன் கடந்த மாதம் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். டிடிஎப் வாசன் அதி வேகத்தில் சென்றதால் விபத்து நடந்தாக கூறப்பட்டது.

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு! | Youtuber Ttf Vasan Gets Police Custody Extension

இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து, போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விபத்தில் தான் காயமடைந்துள்ளதால் சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் வாசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காவல் நீட்டிப்பு

இந்நிலையில், டிடிஎப் வாசனின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைதொர்ந்து, அவர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு முன் மூன்று முறை டிடிஎப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.