இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசம்; திருமணத்திற்கு மறுப்பு - பிரபல யூடியூபர் கைது!
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்திற்கு மறுப்பு
திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் ‘’தமிழ் உங்களில் ஒருவன்’’என்ற யூடியூப் சேனலை பார்த்து, அதனை நடத்தி வரும் தமிழழகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பழகிவந்துள்ள இவர்களுக்கு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணை தமிழழகன், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலமுறை உறவு கொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததால் கண்டித்துள்ளனர்.
யூடியூபர் கைது
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தமிழழகனிடம் அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 17ல் பெண் புகார் அளித்தார்.
புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தமிழழகனின் மொபைல் போன் மூலமாக அவரது முகவரியை கண்டறிந்தனர். இதில் அவர் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் தமிழழகனை கைது செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.