சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசிய யூடியூபர்..முண்டியடித்து எடுத்த மக்கள் - வைரல் வீடியோ!

Viral Video India Telangana Hyderabad
By Swetha Aug 23, 2024 10:38 AM GMT
Report

சாலையில் ரூபாய் நோட்டுகளை யூடியூபர் ஒருவர் தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.

யூடியூபர்..

ஐதராபாத்தின், குகட்பல்லி என்னும் பரபரப்பான பகுதியில் பவர் ஹர்ஷா என்ற யூடியூபர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை பறக்க விட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பணத்தை எடுக்க மக்கள் முண்டியடித்து ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசிய யூடியூபர்..முண்டியடித்து எடுத்த மக்கள் - வைரல் வீடியோ! | Youtuber Throws Money On Busy Road Causes Traffic

அந்த வீடியோவில், யூடியூபர் பவர் ஹர்ஷா மகாதேவ் பைக்கில் பயணம் செய்தபடி பணத்தை தூக்கி எறிவது பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில், அவர் சாலையின் நடுவில் நின்று பணத்தை பறக்க விட்டதை காணலாம்.

ரூபாய் நோட்டு

அதில் சிதறி கிடந்த நோட்டுகளை எடுக்க வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பணத்தை எடுக்கின்றனர். சாலையோரம் நடந்து சென்றவர்களும் ரூபாய் நோட்டுகளை முண்டியடித்து சேகரிக்கின்றனர்.இத்னால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையில் ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசிய யூடியூபர்..முண்டியடித்து எடுத்த மக்கள் - வைரல் வீடியோ! | Youtuber Throws Money On Busy Road Causes Traffic

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் போக்குவரத்து நெரிசல், திடீரென ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்து கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். மேலும், ரூபாய் நோட்டுகளை பறக்க விட்டதற்கு

யூடியூபரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, யூடியூபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக வலைதள பயனாளர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.