யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது - என்ன காரணம்?
யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர்
பெண் காவலர்களை அவதூறாக பேசியயதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தேனியில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும் சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன்
குண்டர் சட்டத்தை எதிர்த்து அவற்றின் தயார் தொடர்ந்த வழக்கில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதோடு சவுக்கு சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகவில்லை.
மீண்டும் கைது
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி செங்கமல செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.