திரும்ப வந்துட்டேன்ய்யா... "திமுகவுக்கு துப்பில்லை... வழக்குப்போட வக்கில்லை... - மீண்டும் வம்புக்கு இழுத்த மாரிதாஸ்
திமுகவையும், அதன் செயல்பாடுகளையும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து வீடியோ, சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தவர்தான் யூடியூப்பர் மாரிதாஸ்.
பாலகிருஷ்ணன் மதுரை மாநகரக் காவல் துறையில் புகாரையடுத்து, யூடியூப்பர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து, மாரிதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 9ம் தேதி இந்திய முப்படைத் தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகலைப் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சிறையிலிருந்து வெளியில் வந்த மாரிஸ்தாஸ், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இக்கட்டான இந்த சூழலில் எனக்காக ஆதரவாக நின்ற பாஜக மத்திய மாநில தலைவர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் என் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீங்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நீங்கள் என் மீது கொண்ட நம்பிக்கைக்கும் என்றும் உரியவனாக இருப்பேன்'’ என்று பதிவிட்டார். இதன் பிறகு, கடந்த 18 நாட்களாக எந்த வித பதிவையும் அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், மீண்டும் திமுகவை விமர்சித்து இன்று மாரிதாஸ் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘திமுக அரசின் பொங்கல் தொகுப்பில் பல்லி. கேள்வி கேட்டவர் மீதே வழக்கு, மனவருத்தத்தில் தீக்குளித்த மகன் இறப்பு! தரமில்லாத பொருளை சப்ளே செய்தவன் மீது வழக்குப் போட துப்பு இல்லை, அவனுக்கு ஆடர் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை. கேட்டவர் குடும்பமே நாசம்! திமுக விடியல்?’ என பதிவிட்டுள்ளார்.
திமுக அரசின் பொங்கல் தொகுப்பில் பல்லி. கேள்வி கேட்டவர் மீதே வழக்கு, மனவருத்தத்தில் தீக்குளித்த மகன் இறப்பு!
— Maridhas?? (@MaridhasAnswers) January 13, 2022
தரமில்லாத பொருளை சப்ளே செய்தவன் மீது வழக்குப் போட துப்பு இல்லை, அவனுக்கு ஆடர் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை.
கேட்டவர் குடும்பமே நாசம்!
திமுக விடியல்?