பிரபல யூட்யூபர் மாரிதாஸ் கைது - என்ன காரணம்?
சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸை கைது செய்துள்ளனர்.
மாரிதாஸ் கைது
கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வந்தார் பிரபல யூட்யூபர் மாரிதாஸ்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் ததளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், விஜயோடு 1000 கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இப்படி குறுக்கு புத்தியல் நீதிமன்றம் வழியாக என்ற போர்வையில் திமுக ஒரு தரப்பை அழிக்கவோ அவமானப்படுத்தவோ முடியும் என்றால்
அவதூறு வழக்கு
இது இன்று விஜய்க்கு நாளை நமக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதற்கு வெக்கமே இல்லாமல் மீடியா கூட்டம் ஒத்து ஊதுவது. இதெல்லாம் வெக்கமா இல்லையா திமுக? நீதிமன்றம் 1 நாளாவது அவகாசம் கொடுத்து விஜய் தரப்பு வாதத்தையும் கேட்டிருக்க வேண்டாமா?
இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும்.
— Maridhas (@MaridhasAnswers) October 4, 2025
10ரூபா பாலாஜி..
விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன - மாலை 6 மணிக்கு..
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழக்கும் நிலைக்கு இந்த நாடகம் நடந்துள்ளது. உடனடியாக விஜய் தரப்பு உச்ச நீதிமன்றம் நாட வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடகத்தின் விவரம் வீடியோவாக வெளியிடப்படும்.
10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நீதிமன்றத்தில் நடந்த தந்திரம் என்ன என்பது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு வீடியோ வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.