பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் குருஜி கைது!
மத்திய அரசை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங் களில் வீடியோ வெளியிட்ட நபர் உத்திர பிரதேச போலீசாரால் சென்னை மாதவரத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாதவரம் வி ஆர் டி நகர் 2வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா (62). இவர் கடந்த 30 வருடங்க ளாக மாதவரத்தில் வசித்து வருகிறார்.
மண்ணடி பகுதியில் பாரத் ஸ்வாதி மான் சுதேசி டிரஸ்ட்டை கடந்த 7 வருடமாக நடத்தி வரும் ,மன் மோகன் மிஸ்ரா ( Manmohan Mishra ) இவருடைய தனது யூடியூப் பக்கத்தில் ,பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து இணையதள வலைதளத்தில் தவறாக பதிவிட்டதால்உத்திரப்பிரதேசத்தில் உள்ள கொட்வாளி காவல் நிலையத்தில் இது குறித்து பலர் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்ட நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தேடிய நபர் சென்னை மாதவரத்தில் வசிப்பதை அறிந்த போலீசார் நேற்று மதியம் வீட்டிலிருந்த அவரை கைது செய்தனர்.
பின்பு மாதவரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடல் பரிசோதனை செய்யப்பட்டு உத்திர பிரதேச போலீசார் அம்மாநிலத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது