மீண்டும் sting வீடியோ .. சிக்கும் முக்கிய புள்ளிகள் : பரபரப்பை ஏற்படுத்திய மதன் ரவிச்சந்திரன்
மீண்டும் sting வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மதன்ரவிச்சந்திரன்
நீண்ட நாட்களுக்கு பிறகு மதன் ரவிச்சந்திரன் அண்ணாமலையின் மறுபக்கம் என்ற வீடியோவினை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த யூடியூபர் மதன் தனது மதன் டைரீஸ் சேனலில் வெளியிட்டார். இது கடுமையான அதிவர்லைகளை ஏற்படுத்திய நிலையில், கே.டி.ராகவன் தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
அந்த வீடியோவை மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடனேயே வெளியிட்டதாகவும் மதன் கூறியிருந்தார். அதன் பிறகு மதன் ரவிச்சந்திரன் என்ன ஆனார் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை இந்த நிலையில் அண்ணாமலையின் மறு பக்கம் பல தமிழக பிரபலங்களின் உடைபடும் பல போலி பிம்பங்கள் என்ற முழு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழ்கத்தின் பிரபல யூடியூப் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் உள்ள தொகுப்பாளர்கள் ஓரிடத்தில் கூடி லஞ்சம் வாங்குவது போலவும் திருச்சி சிவா போன்றோர் அதில் இருப்பது போன்றும் வீடியோ உள்ளது
இந்த வீடியோ தற்போது தமிழக செய்தியாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.