கே.டி. ராகவனின் சில்மிஷ வீடியோ- மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனல் முடக்கம்

blocked youtube channel youtubed madan ravichandran
By Anupriyamkumaresan Aug 25, 2021 12:30 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் யூடியூப் சேனல் முடங்கியது.

பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் நேற்று அறிவித்தார்.

கே.டி. ராகவனின் சில்மிஷ வீடியோ- மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனல் முடக்கம் | Youtuber Madan Ravichandran Youtvube Page Blocked

இந்த வீடியோ காட்சிகளை யூடியூப்பர் மதன் ரவிச்சந்திரன்வெளியிட்டார். அவர் நடத்தி வரும் ‘Madan Diary’என்ற யூ-டியூப்பில் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மாநில தலைவர் அண்ணாமலை சொல்லித்தான் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும், அது தொடர்பான வாட்ஸ்ஆப் ஸ்கிரீன்ஷாட்டையும் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

கே.டி. ராகவனின் சில்மிஷ வீடியோ- மதன் ரவிச்சந்திரன் யூடியூப் சேனல் முடக்கம் | Youtuber Madan Ravichandran Youtvube Page Blocked

பாஜகவில் உள்ள பல தலைவர்களின் வீடியோக்களும் இனி வரும் நாள்களில் வெளியாகும் என மதன் ரவிச்சந்திரன் தெரிவித்து இருந்த நிலையில், மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூடியூப் சேனல் முடங்கியது.