மனைவியை பிரிந்து விட்டாரா? இதுதான் பிரச்சனை - முதல் முறை மனம் திறந்த மதன் கௌரி!
தன்னை பற்றிய வதந்திகள் குறித்த முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் பிரபல யூடியூபர் மதன் கௌரி.
மதன் கௌரி
யூடியூபில் சுவாரஸ்யமான தகவல்களையும், உள்ளூர் முதல் உலக விவகாரங்கள் வரையிலான தகவல்களையும் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் மதன் கௌரி.
இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. கடந்த ஆண்டு நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மதன் கௌரி. இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதற்கிடையில் இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இத்தனை நாட்கள் எதுவுமே பேசாமல் இருந்த மதன் கௌரி தற்போது மனம் திறந்துள்ளார்.
முற்றுப்புள்ளி
அவர் பேசியதாவது "அதில், கடந்த ஓராண்டாக என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
உண்மையில் நான் குடும்ப வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் நானே முதலில் உங்களிடம் சொல்வேன். ஏன் என்றால் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது நீங்கள் தான் என்றார்.
இதனால், இணையத்தில் வரும் தகவல்களை யாரும் நம்பாதீர்கள்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவரின் திருமண வாழ்க்கை குறித்த வதந்திகளுக்கு மதன் கௌரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.