கட்டம் கட்டும் காவல்துறை , கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

By Irumporai May 31, 2022 04:10 AM GMT
Report

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அம்மன் கோயில் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக நேற்று யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது.

அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் மாற்று மதத்தினர்தான் கோவில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

கட்டம் கட்டும் காவல்துறை ,  கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் | Youtuber Karthick Gopinath Arrested

அத்துடன் பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கப் போவதாக கூறி நிதி வசூல் செய்தார் 

இந்த  நிலையில் , கார்த்தி கோபிநாத் மொத்தம் ரூ34 லட்சம் வசூல் செய்ததாகவும் இத்தொகையில் அவர் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஆவடி போலீசார் கார்த்தி கோபிநாத்தை கைது செய்தனர். 

தற்போது வங்கி கணக்கில்  ரூ.3 லட்சம் மட்டுமே உள்ளதால் எஞ்சிய பணம் எங்கே என்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.