மீண்டும் சிக்கலில் மாட்டிய யூ டியூபர் இர்ஃபான் - நடவடிக்கை எடுக்க உள்ள அரசு
பிரபல யூ டியூபர் இர்பான் வெளியிட்டுள்ள வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
யூ டியூபர் இர்பான்
பிரபல யூ டியூபர் இர்பான் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், மன்னிப்பு கேட்டு இர்பான் அந்த வீடியோவை டெலிட் செய்ததால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தொப்புள் கொடி வீடியோ
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் இவரின் மனைவிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் யூ டியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் மற்றும் முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.