யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
யூடியூபர் இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபர் இலக்கியா
பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா. இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருக்கிறார். அதிக அளவில் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் யூடியூபர் இலக்கியா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தற்கொலை முயற்சி
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும் இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் எனவும் இலக்கியா தரப்பிலிருந்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம்.
என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணு கூட பழக்கம். அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என அவரது ஃபோட்டோவுடன் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.