யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கைது.. சீமான் கண்டனம்!
திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன் பல வீடியோக்களை தனது யூடியூபில் பதிவு செய்து வருபவர்.
இவர் திருச்சியில் உள்ள கார் உதிரி பாக கடை உரிமையாளர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி அவமதித்து விட்டதாக கூறி அவரின் கடைக்கு சென்று மிரட்டி வீடியோ எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில்:
தேசியத்தலைவர் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்டவரை, காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த நால்வரை கைது செய்துள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு! தம்பிகள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்க என தெரிவித்துள்ளார்.