நாய்க்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு கட்டிய பிரபல யூடியூபர்
அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணியான நாய்க்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு கட்டியுள்ளார்.
நாய்க்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு
யூடியூபர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருப்பார். இவர் வளர்த்து வந்த பேக்கர் என்ற நாய் இறந்து போனது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் அடுத்தடுத்ததாக சார்லி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார்.

இந்த நிலையில் சார்லியின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு அந்த நாய்க்கு ஒரு சொகுசு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டார். தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டை கட்டினார்.
அந்த வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் டி.வி., சோபா, மெத்தை, பிரிட்ஜ், தலையணைகள் என அனைத்தும் உள்ளது.
வீட்டின் வெளியே இது சார்லியின் வீடு என்ற பெயர் பலகை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.