பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் கைதாகி இருக்கும் யூடியூபர் பிரியாணி மேன்!! பரபரப்பு பின்னணி?
பிரபல யுடியூபர் பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாயத்து
சில நாட்களாக சமூகவலைத்தளத்தில் குறிப்பாக யூடியூப்பில் இர்பான் மற்றும் பிரியாணி மேன் ஆகிய இருவருக்குமே கருத்து மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. இர்பானை சரமாரியாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார் பிரியாணி மேன்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இர்பான் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கும் ஒரு ரிப்ளை வீடியோ வெளியிட்டார் பிரியாணி மேன். ஆகா, சமூகவலைத்தளங்களில் கடுமையாகாவே மோதிக்கொண்டார்கள் இருவருமே.
கைது
பஞ்சாயத்து பெரிதாகி போன நிலையில், மேலும் ஒரு விஷயமாக யூடியூப் லைவில் தற்கொலை முயற்சி செய்துள்ளார் பிரியாணி மேன். இது தொடர்பான வீடியோ நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
தற்போது பிரியாணி மேன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட 4 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.