YouTube Monetization செய்ய இனி இது தேவையில்லை - வெளியான முக்கிய தகவல்..!

Youtube United States of America
By Thahir Jun 16, 2023 03:16 AM GMT
Report

பிரபல சமூக ஊடக தளமான யூடியூப்பை (YouTube) பயன்படுத்தாதோர் இன்று யாருக்கும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இன்று யூடியூப் பயன்படுத்தும் பயனாளர்கள் எண்ணிக்கை என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

யூடியூப் நிபந்தனை 

இன்று பலரும் யூடியூப்பில் கணக்கு தொடங்கி அதில் பணம் சம்பாதிக்க முயன்று வருகின்றனர். இந்நிலையில், யூடிப்பில் பணம் சம்பாதிக்க யூடிப்பில் Monetization ஆனால் மட்டும் பணம் சம்பாதிக்க முடியும்.

அதற்கு யூடியூப் நிர்வாகம் பல நிபந்தனைகளை விதித்திருந்தது. அதன் படி நீங்கள் யூடியூப்பில் சேனல் வைத்திருந்தால் நீங்கள் 4000 பார்வை நேரங்களையும் 1000 சப்ஸ்கிரைப்பர்களையும் பெற்றிருக்க வேண்டும் அப்போது தான் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

Youtube Monetization New Rule Update

இந்த நிலையில் தற்போது 1000 சப்ஸ்கிரைபர்கள் என்பதற்கு பதிலாக 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தாலே அவர்களுக்கு monetization என்ற வசதி கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிறிய அளவில் யூடியூப் நடத்தும் பயனர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1000 சப்ஸ்க்ரைபரில் இருந்து 500 சப்ஸ்கிரைபர்கள் என மாற்றப்பட்டாலும் 4000 பார்வை நேரம் என்பதில் மாற்றமில்லை.

இந்தியாவில் எப்போது?

1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 பார்வை நேரங்கள் என்பதை 500 சந்தாதாரர்கள் என யூடியூப் மாற்றி இருப்பதை அறிந்து சிறிய படைப்பாளிகள் தங்கள் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதிப்பது இனி எளிது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே நேரத்தில் இந்த வசதி இப்போதைக்கு அமெரிக்கா, பிரிட்டன், தைவான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும். விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.