யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாத்தி கம்மிங் பாடல் - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’பாடல் யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த வருடம் தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் சாதனை செய்தது. கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையும் ’மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்தது.
இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’பாடல், படம் வெளியாவதற்கு முன்பே இந்தியா முழுக்க வைரலாகி ஹிட் அடித்தது. படம் வெளியான பிறகு, கடந்த ஜனவரி மாத இறுதியில் தான் ‘வாத்தி கம்மிங்’வீடியோ பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர்.
படம் வெளியானதிலிருந்து இப்போதுவரை உலகம் முழுக்க ரசிகர்களும் பிரபலங்களும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ’வாத்தி கம்மிங்’பாடல் வெளியான 7 மாதத்திலேயே யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அதோடு, இரண்டரை மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.