வீட்டை சுற்றிக்காட்டி வீடியோ போட்ட பெண் யுடியூபர்.., நகை, பணம் கொள்ளை
மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள மோகனி கிராமத்தைச் சேர்ந்த ரச்னா குர்ஜார் என்ற பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அவரது சேனலை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கிறார்கள்.
அவர் தனது வீட்டை சுற்றிக்காட்டிய வீடியோ மற்றும் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை காட்டும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி முகமூடி அணிந்த கும்பல் ஒன்று அவரது வீட்டிற்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
திருடப்பட்ட இந்த பொருட்களின் மதிப்பு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனைதொர்ந்து, ரச்னா குர்ஜார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான் IBC Tamil
சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு IBC Tamil