முக்கிய சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு - பயனாளர்கள் அதிர்ச்சி

Google Youtube
By Petchi Avudaiappan May 04, 2022 08:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

YouTube Go சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு மோசமான இணையதள இணைப்பு மற்றும் குறைந்த விலை மொபைல் போன்களைக் கொண்ட பயனர்களுக்காக யூடியூப் கோ உருவாக்கப்பட்டது. இதன்மூலம் யூட்யூப்பை அணுகுவதற்கான எளிய சாதனங்களாக யூடியூப் கோ பார்க்கப்பட்டது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தை கடுமையாக வளர்ச்சியடைந்ததால் YouTube Go சேவை பயனற்றதாக மாறிவிட்டது. இதனால் அந்த சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக தன் அதிகாரப் பூர்வப் பக்கத்தில் யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. 

YouTube Goவில் இல்லாத கருத்துத் தெரிவிக்கும் திறன், இடுகையிடுதல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் டார்க்கைப் பயன்படுத்துதல் போன்ற பல அம்சங்களையும் யூட்யூப் வழங்கியிருந்ததால் அனைத்து பயனாளர்களும் அதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் YouTube Go சேவை நிறுத்தப்பட உள்ளதால் குறைந்த விலை மற்றும் பட்ஜெட் போன்களை வேகமாக இயக்க அனுமதிக்கும் ஆண்ட்ராய்டின் மெலிந்த பதிப்பான ஆண்ட்ராய்டு கோவின் (Android Go) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.