இளம்பெண்களிடம் ஆபாசபேட்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பிரபல யூ-டியூப் சேனல் குழு கைது!

arrest youtube owner
By Jon Jan 13, 2021 01:27 PM GMT
Report

சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்களை வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் செல்பேசியில், வெளியிடப்படாத பல பெண்களின் வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அவர்களின் பதிலை சென்னை டாக் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வந்தது.

இது குறித்து புகார் வந்ததால் சாஸ்திரிநகர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். இதனையடுத்து பெசன்ட்நகர் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாஸ்திரிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் இதுபோன்று 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் உரிமையாளர் தினேஷ் மற்றும் தொகுப்பாளர் ஆசான் ஒளிப்பதிவாளர் 2என 3 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர்,அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஆபாசமாக வீடியோக்கள் வெளியிடப்பட்ட சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலை முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது.