குடிபோதையில் ரகளை: டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்துக்கு புதுவை போலீசார் வலைவீச்சு

gopinath puducherrypolice daddyarumugam
By Irumporai Nov 23, 2021 04:39 AM GMT
Report

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூட்யூப் சமையல் கலைஞரின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டையில் உள்ள உணவகத்திற்கு, பிரபல யூடியூப் சேனலைச் சேர்ந்த டாடி ஆறுமுகத்தின மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்களான ஜெயராம், தாமு ஆகிய 3 பேர் சென்றுள்ளனர்.

அங்குள்ள பிரபல மது விடுதியில் மது அருந்திவிட்டு, அங்கிருந்த ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக  கூறப்படுகிறது. மேலும், இரவு 11 மணியான பிறகும் மது கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், மதுபான விடுதி மூடப்பட்டதால்,மது வழங்க மறுத்துள்ளனர்.

இதனால், கோபமடைந்த கோபிநாத், எனக்கே மது கொடுக்க மாட்டாயா..? என்றுக் கூறி , அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துஅதோடு, மூவரும் அங்கிருந்த ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த சம்பவம் தொடர்பாக மது பான விடுதி  ஊழியர்கள் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

குடிபோதையில் ரகளை: டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்துக்கு புதுவை போலீசார் வலைவீச்சு | Youtube Famous Daddy Arumugam Son Drunken Case

இந்த நிலையில் அவர்களை எச்சரித்த போலீஸார் காவல்நிலையத்திற்கு வரசொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுளள்னர்.

ஆனால் அவர்கள் காவல் நிலையம் வரவில்லை. இதனை அடுத்து தனியார் ஹோட்டல் ஊழியர் ஜார்ஜஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர் .

டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் பேக்டரி எனும் யூடியூப் சேனல் மூலம் குக்கிங் வீடியோ உலகளவில் பிரபலம் என்பது நாம் அறிந்ததே, யூடியூப் மூலம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த டாடி ஆறுமுகம் மதுரை, புதுவையில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.  இதில் புதுவை உணவகத்தை கோபிநாத் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.