மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்! இளைஞர்களுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்
இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் யூடியூப் சேனல்களை தொடங்கி எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து பயிற்சியை வழங்கவுள்ளது தமிழக அரசு.
அதாவது Chat GPTயின் பயன்பாடு உட்பட சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளது.
இந்த பயிற்சியில் யூடியூப் சேனல்களை எப்படி உருவாக்குவது, வீடியோக்களை எவ்வாறு பதிவேற்றுவது என்பது மட்டுமல்லாமல் அதிலுள்ள நுணுக்கங்களை அறிந்துகொள்ளும் வண்ணம் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களை கவரும் வகையில் வீடியோக்களை உருவாக்குவது, அதை எடிட் செய்வது என பலவகையான கான்செப்ட்கள் கற்பிக்கப்படவுள்ளது.
மேலும் SEO தொடர்பான பயிற்சிகளும், தங்களது வீடியோக்களுக்கு எவ்வாறு அதிகளவிலான பார்வையாளர்களை ஈர்ப்பது என்பது குறித்தும் கற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதவிர தங்களது வீடியோக்களை மற்ற சமூகவலைத்தளங்களில் எவ்வாறு விளம்பரப்படுத்துவது என்பது குறித்தும் கற்பிக்கப்படவுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
சென்னையில் ஏப்ரல் 22 முதல் 24ம் தேதி வரை இப்பயிற்சி நடைபெறவுள்ளது, காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது வரை உள்ள நபர்கள் பங்கேற்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு WWW.editn.in என்ற தளத்தை பார்வையிடவும்.