யூடியூப் சி.இ.ஓ திடீர் ராஜினாமா : சுந்தர்பிச்சை வரிசையில் மற்றொரு இந்தியர்
யூடியூப் வீடியோ தளத்தின் புதிய நிர்வாகியாக நீல் மோகன் பொறுப்பேற்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது பொறுப்பில் இருந்து அதன் நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி விலகி இதை அடுத்து அவருக்கு பதிலாக, இந்திய-அமெரிக்கரான நீல் மோகன் கூகுளின் வீடியோ பிரிவு யூடியூப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.
யூடியூப்
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் இந்திய-அமெரிக்க நிர்வாகிகளின் பட்டியலில் இதை அடுத்து மோகன் இணைகிறார்.
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் மற்றும் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய ஜாம்பவான்களின் தலைமையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிஇஓக்களின் பட்டியலில் அவர் இணைவார்.

தலைமை பொறுப்பில் இந்தியர்
இந்திரா நூயி 2018 இல் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பு பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
வோஜ்சிக்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரியாக பதவி ஏற்றார் என்பதும் அவரது தலைமையின் கீழ் யூடியூப் நிறுவனம் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.