மனித எலும்பிலிருந்து போதை; கல்லறையை தோண்டும் இளைஞர்கள் - பகீர் சம்பவம்!
போதைப்பொருள் தயாரிக்க கல்லறையை தோண்டி எலும்புகளை எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு 'சியரா லியோன்'. இந்த நாட்டில் குஷ் எனப்படும் போதைப்பொருளை இளைஞர்கள் பெருமளவில் உபயோகித்து வருகின்றனர். இது அதிக போதை தன்மை கொண்டதாக உள்ளது.
இதனை எடுத்துக்கொள்பவர்கள் சில நிமிடங்களில், தன்னிலை மறந்து ஜாம்பி போன்று நடந்துகொள்கின்றனர். இந்த போதைப்பொருளை தயாரிக்க முதன்மையாக இருப்பது மனித எலும்பு. மனித எலும்புடன் சில நச்சு பொருட்கள் சேர்க்கப்பட்டு இந்த போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
கல்லறைக்கு பாதுகாப்பு
இந்த போதைக்கு அடிமையானவர்கள் அதிகரித்த நிலையில் மனித எலும்புகளின் தேவை அதிகரித்தது. இதனால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் கல்லறைகளை தோண்டி எலும்புகளை எடுக்கத் தொடங்கினர். இதனால் அந்நாட்டு பிரதமர் ஜூலியஸ் மாடா பயோ, இந்நிலையை தேசிய அவசரநிலையாக அறிவித்தார்.
இதனையடுத்து கல்லறைக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சாமாளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.