இதுக்கு அப்புறம் நடக்காது..! ரீல்ஸ் மோகம் - மயிலாப்பூர் கோவிலில் அந்த மாதிரி டான்ஸ் ஆடிய இளைஞர்கள்..!
பிரசித்திபெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டதற்கு இளைஞர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
ரீல்ஸ் மோகம்
இளைய சமூகத்தை தற்போது இணைய வழி பிரபலமடையும் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. சகட்டுமேனிக்கு பல இடங்களில் வீடியோக்கள் எடுக்கும் அவர்களால் பல இடங்களில் பொதுமக்கள் இன்னல்களை சந்தித்தும் வருகின்றனர்.
ஆனால், தங்களின் மோகத்தை இளைஞர்கள் கைவிட்டதாக தெரியவில்லை. அதன் ஒரு நீட்சி தான் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இளைஞர்கள் கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Apologies for making dance Video In Kabhalishwar temple ??@tnhrcedept pic.twitter.com/grMAZZrZE8
— Vicky’s thoughts (@Vicky_offi) February 4, 2024
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை திருக்கோவில் நிர்வாகம் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து இளைஞர்கள் இருவரும் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில்,நல்ல நோக்கத்தில்தான் செய்தோம். ஆனால் இது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் இவ்வாறு கோவில்களில் நடனமாட மாட்டோம் என்றும் சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.