தேவர் குரு பூஜையின் போது வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் கைது
arrested
vehicle
youth
thevar
gurupooja
By Irumporai
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் கடந்த மாதம் 30ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 54வது குருபூஜை விழா நடைபெற்றது
இந்த நிலையில் 9 மற்றும் 30ம் தேதிகளில்முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்த இளைஞர்கள் அரசுத்துறை வாகனம், பேருந்துகளின் மீது ஏறி ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் கமுதி போலீசார் cctv கேமராவில் வாகனம் மீது நடனம் ஆடிய பதிவான வீடியோ காட்சி பதிவுகளை வைத்து கல்லூரி மாணவர்கள் அஜய்குமார், கருப்புசாமி, வாசு ஆகிய 3 பேரும், அவர்களோடு காளீஸ்வரன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேரை கமுதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்