கொரோனா தடுப்பூசி போட தயங்கும் அமெரிக்க இளைஞர்கள்

America Covid vaccine
By Petchi Avudaiappan Jul 15, 2021 10:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

கொரோனா தடுப்பூசி போட அமெரிக்க இளைஞர்கள் தயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாதிப்புக்கு தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு ஆகியுள்ளது. இதனிடையே இளம் தலைமுறையினரிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்குவதற்காக பிரபல பாடகரும் நடிகையுமான ஒலிவியா ரோட்ரிகோவை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்த அமெரிக்க வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் வயதானவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இளம் தலைமுறையினர் தயங்கி வருகின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் வரும் நவம்பருக்குள் 70% பேருக்கு கூட தடுப்பூசி போட்டு முடியாத முடியாத நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.