யூடியூப் வீடியோ பார்த்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்
சத்தியமங்கலம் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் பத்ரிநாதன் என்பவர் கன்னிகா ஜுவல்லரி என்ற நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதில் நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர் ஒருவர் இக்கடையின் பக்கவாட்டு சுவரை இடித்து நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார் .
அப்போது சத்தம் கேட்டு அருகிலுள்ள மக்கள் வந்த பார்த்தபோது அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் கட்டளை கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்ற இளைஞரை புளியம்பட்டி அருகே சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜபாண்டி தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருவதாகவும், யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
