21 வயதுதான் - திருமணத்தில் நடனமாடிய இளைஞர் திடீர் மரணம்!
திருமண நிகழ்ச்சியில் மதுபோதையில் நடமானடிய இளைஞர் திடீரென மரணமடைந்தார்.
திருமண நிகழ்ச்சி
சென்னை சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணி பிரசாந்த்(21). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணியாற்றிய இளம்பெண் ஒருவரின்
திருமண வரவேற்பு நிகழ்ச்சி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி பிரசாந்த், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நடனமாடியுள்ளார்.
இளைஞர் மரணம்
அப்போது திடீரென மணி பிரசாந்த் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.