Friday, Jul 18, 2025

எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையனை தலை தெறிக்க ஓடவிட்ட பெண் -அதிர்ச்சி சம்பவம்!

India Mumbai
By Jiyath 2 years ago
Report

கொள்ளையடிக்க வந்த வாலிபரை எய்ட்ஸ் இருப்பதாக கூறி பெண் ஒருவர் ஓடவிட்டுள்ளார்.

கொள்ளை சம்பவம்

மும்பை போரிவிலி என்ற பகுதியில் 53 வயதான விதவை பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இரவில் தனது வீட்டில் உள்ள அறையில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அறையின் கம்பியில்லாத ஜன்னல் சரியாக பூட்டப்படாமல் இருந்துள்ளது.

எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையனை தலை தெறிக்க ஓடவிட்ட பெண் -அதிர்ச்சி சம்பவம்! | Youth Who Came To Rob Her Saying She Had Aids

அப்போது 25 வயதான வாலிபர் ஒருவர் அந்த ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு அந்த பெண் எழுந்து பார்த்ததும் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அறையில் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது அந்த வாலிபர் விதவை பெண்ணை தாக்கி வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

தெறிச்சு ஓடிய கொள்ளையன்

தன்னுடன் கொள்ளையன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போது என்ன செய்வது என்று யோசித்த பெண் 'தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், எனது ரத்தத்தை உன் மீது பூசி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதைக் கேட்டதும் அந்த கொள்ளையன் அங்கிருந்து தலை தெறிக்க ஓடியுள்ளார்.

எய்ட்ஸ் இருப்பதாக கூறி கொள்ளையனை தலை தெறிக்க ஓடவிட்ட பெண் -அதிர்ச்சி சம்பவம்! | Youth Who Came To Rob Her Saying She Had Aids

பின்னர் அந்த பெண் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து ஜன்னலை சரியாக பூட்டி விட்டு உறங்கியுள்ளார். மறுநாள் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.