வாகன ரோந்து சோதனையின் போது இளைஞர் தற்கொலை - சென்னையில் பரபரப்பு

Youth suicide Thirumullaivoyal police
By Petchi Avudaiappan Jul 12, 2021 05:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

சென்னையில் போலீசின் வாகன தணிக்கையின்போது இளைஞர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் அருகே அயப்பாக்கத்தில் பாக்கியராஜன் என்ற இளைஞர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது வாகன தணிக்கையின்போது ரோந்து வந்த போலீசார் பாக்கியராஜனை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. 

அப்போது எதிர்பாராதவிதமாக பாட்டிலை உடைத்த பாக்கியராஜன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் அதிகமாக இரத்தம் வெளியேறியதால் பாக்கியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.