தங்கையை, 2 ஆண்டுகள் அண்ணனே சீரழித்த கொடூரம் - வீடியோ காட்டி ப்ளாக்மெயில்!
தங்கையை, அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ராஜஸ்தான், சுரூ மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகிலேயே பெரியப்பா மகன் வசித்து வருகிறார்.
அண்ணன் என்பதால் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அதேபோல், வழக்கம்போல சகோதரி வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் தனிமையில் இருந்ததை தெரிந்து கொண்டு, பலவந்தமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
மிரட்டல்
மேலும், அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். அதனை வைத்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2 வருடமாக இது தொடர்ந்து வந்த நிலையில், பெண் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
அதனை கண்டு பெற்றோர் விசாரித்ததில் சம்பவத்தை கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே இதுகுறித்து போலீஸில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.