கிணற்றருகே நின்று சண்டை போட்டு அவருக்கு நேர்ந்த கொடுமை - நெல்லையில் பயங்கரம்
நெல்லை அருகே குடிபோதையில் உறவினரை கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ராமர் என்பவர் தனது மனைவி தங்கம்மாள் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ராமரும், அவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த சுடலை என்பவரும் இணைந்து வேலை செய்து வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல் மது அருந்திவிட்டு ஊருக்கு அருகில் உள்ள கிணற்றின் அருகே அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது போதையின் உச்சத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த சுடலை, ராமரை கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாகவும், உள்ளே விழுந்த அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார்.
உடனே இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணிநேர போராட்டத்திற்கு பின் ராமனின் உடலை மீட்டு மூலைக்கரைப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் தள்ளி கொலை செய்த சுடலையை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.